டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ – TNPSC Group 1B and 1C Job Notification 2024

TNPSC Group 1B and 1C Job Notification 2024

தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் காலியாகவுள்ள உதவி ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

TNPSC Group 1B and 1C Job Notification 2024
TNPSC Group 1B and 1C Job Notification 2024

தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதற்கு மே 22 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

கல்வித் தகுதி :

உதவி ஆணையர் பணியிடத்திற்கு பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெற்ற ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் மூன்று ஆண்டுகள் இளங்கலை சட்ட படிப்பு அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மற்றும் குடிமை அல்லது குற்றவியல் வழக்குகளை நடத்தும் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்களில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பயிற்சி வழக்குரைஞராக பயிற்சியிலிருக்க வேண்டும்.

அல்லது

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை- 1 அல்லது நிலை 2 அல்லது நிலை 3 அல்லது நிலை 4 (அல்லது) ஆய்வாளர் (அல்லது) தலைமை எழுத்தர் (அல்லது) மேலாளர் (அல்லது) கண்காணிப்பாளர் பதவியில் குறைந்தது ஆறு ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு, பொதுப் போட்டித் தேர்வர்கள், பல்கலைக் கழக மானியக் குழுவாவால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தின் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பெற்ற முதுகலைப் பட்டம் (அல்லது) அப்பட்டப் படிப்பு தரத்திற்கு இணையானவற்றில் பின்வரும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம்.

இடைநிலை அல்லது முன் பல்கலைக் கழக படிப்பு அல்லது மேல்நிலைப் படிப்பில் பகுதி-1 அல்லது பகுதி 2 தமிழை கட்டாயம் படித்திருக்க வேண்டும். மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கற்பித்தல் (B.T) அல்லது இளங்கலை கல்வியியல் (B.Ed) பட்டம் அல்லது அப்பட்டப் படிப்பிற்கு இணையான தரம்.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் வகை தேர்வர்கள், பல்கலைக் கழக மானியக் குழுவாஅல் அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தின் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பெற்ற முதுகலைப் பட்டம் (அல்லது) அப்பட்டப் படிப்பு தரத்திற்கு இணையானவற்றில் பின்வரும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம்.

இடைநிலை அல்லது முன் பல்கலைக் கழக படிப்பு (PUC) அல்லது மேல்நிலைப் படிப்பில் பகுதி 1 அலல்து பகுதி 2 ல் தமிழை கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

இளங்கலை கற்பித்தல் (B.T) அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் மொத்தம் 12 ஆண்டுகளுக்குக் குறையாமல் கற்பித்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கு உதவி ஆணையர் – 34 (இந்து மதத்தினர் மட்டும்). பிசி, பிசி முஸ்லிம்கள், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 39.

தேர்வு செய்யப்படும் முறை :

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள், முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைப்படி தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வு 12.07.2024 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதல்நிலைத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கு பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரத்தில்) – 175 கேள்விகள், திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு – 25 கேள்விகள், கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

முதன்மைத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி உதவி ஆணையர் பதவிக்கு முதல் தாள் – தமிழ் தகுதித் தேர்வு  (10ஆம் வகுப்புத் தரம்) – 100 மதிப்பெண்கள், இரண்டாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்) 250 மதிப்பெண்கள், மூன்றாம் தாள் – இந்து சமயம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள், 4ஆம் தாள் – சட்டம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள், மொத்தம் – 750 மதிப்பெண்கள், நேர்காணல் – 100 மதிப்பெண்கள், ஒட்டு மொத்தம் – 850 மதிப்பெண்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

முதல்நிலைத் தேர்வுக்கு ரூபாய் 100, முதன்மைத் தேர்வுக்கு ரூபாய் 200 விண்ணப்பக் கட்டணம் ஆகும். சிறப்புப் பிரிவினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப கட்டணத்தில் சலுகையோ, நீக்கமோ உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனைல் முறையில், மே 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Government Job Whatsapp Group Join
 TNPSC Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TNPSC Group 1B and 1C Job Notification 2024
TNPSC Group 1B and 1C Job Notification 2024

Notification Link:

Apply Link:

For More Job Info:

Leave a Comment