TN Un employee Stipend Amount 2024
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழகத்தில் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இதுவரை வேலைவாய்ப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
For More Job Info Join:
இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300, மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400, பட்டதாரிகளுக்கு ரூபாய் 600 என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி இல்லை என்றால் ரூபாய் 600, மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 750, பட்டதாரிகளுக்கு ரூபாய் 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெற அனைத்து அசல் சான்றுகள், அடையாள அட்டை உடன், நாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNPSC Whatsapp Group | Join |
Government Job Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |