TN Ration Shop Timing Change Information 2024
தமிழகத்தில் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன கார்டு கிடைக்க போகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டையாகவும் உள்ளது.
For More Job Info Join:
ரேஷன் கடை நேர மாற்றம் :
தமிழக ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8.30 மணி முதல் பகல், 12.30 மணி வரையும் பிற்பகல், 3.00 மணி முதல் இரவு, 7.00 மணி வரையும் செயல்படுகின்றன.
மற்ற மாவட்டங்களில் காலை, 9.00 மணி முதல் பிற்பகல், 1.00 மணி வரையும், பிற்பகல், 2.00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.
அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Government Job Whatsapp Group | Join |
TNPSC Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |