Ayodyha Ramar Temple Kumbabisagam Beautiful Images 2024
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை ஜனவரி 22ஆம் தேதி மிகக் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
உலகெங்கும் உள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நாள் நாளை வரவிருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அயோத்தியே தயார் நிலையில் உள்ளது.
For More Job Info Join:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை திறந்து வைக்கிறார். இதற்காக அவர் பிரத்தியேக விரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பழங்கால கட்டடக் கலையை புகுத்தி இந்த ராமர் கோவில் முழுக்க முழுக்க கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ராமர் கோவிலின் சில பிரேத்தியேக புகைப்படங்கள் நமது ஏசியாநெட் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
நாளை காலை ராமர் கோவில் திறக்கப்படும் நேரத்தில் ஸ்ரீ ராமருடைய திருஉருவ சிலை கோவிலில் நிறுவப்பட உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முன்னணி நடிகர்கள்:
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இன்று அயோத்தி புறப்பட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் உள்ள விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் மக்கள் பெருந்திரளாக குழுமி வருகின்றனர். ராமர் கோவிலை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகின்றது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு சுமார் 10 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தி நகரமே ஒளிரூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது கடைவீதிகளும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளது.
ஆயிரத்தில் உள்ள வீடுகளிலும் தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் ராம தீபம் ஏற்ற அரசு மக்களை ஊக்குவித்து வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக இது கருதப்படுகிறது.
சில மணி நேரங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அர்ஜுன் அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், பிரதமர் மோடி அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய குழுவினருக்கும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக அங்கு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Job Info: